/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டில்லி அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் மும்பை ஏமாற்றம்
/
டில்லி அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் மும்பை ஏமாற்றம்
டில்லி அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் மும்பை ஏமாற்றம்
டில்லி அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் மும்பை ஏமாற்றம்
UPDATED : பிப் 15, 2025 11:12 PM
ADDED : பிப் 15, 2025 10:10 PM

வதோதரா: பிரிமியர் லீக் போட்டியில் கடைசி பந்தில் அசத்திய டில்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இந்தியாவில், பெண்கள் பிரிமியர் லீக் 3வது சீசன் நடக்கிறது. வதோதராவில் (குஜராத்) நடந்த லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
மும்பை அணிக்கு நாட் சிவர்-புருன்ட் (80), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (42) கைகொடுக்க, 19.1 ஓவரில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டில்லி அணி சார்பில் அன்னாபெல் 3, ஷிகா 2 விக்கெட் சாய்த்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷபாலி வர்மா (43) நம்பிக்கை தந்தார். ஜிந்திமணி கலிதா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன. முதல் 5 பந்தில் 8 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் அருந்ததி 2 ரன் எடுத்தார். டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது. ராதா (9), அருந்ததி (2) அவுட்டாகாமல் இருந்தனர்.