/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டக்கெட் சதம்: இங்கிலாந்து தடுமாற்றம்
/
டக்கெட் சதம்: இங்கிலாந்து தடுமாற்றம்
ADDED : அக் 16, 2024 10:20 PM

முல்தான்: முல்தான் டெஸ்டில் இங்கிலாந்தின் பென் டக்கெட் சதம் விளாசினார்.
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் முல்தானில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 259/5 ரன் எடுத்திருந்தது. ரிஸ்வான் (37), சல்மான் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் (41), சல்மான் ஆகா (31), அமீர் ஜமால் (37), நோமன் அலி (32) ஓரளவு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜாஹித் மஹ்மூத் (2) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4, பிரைடர் கார்ஸ் 3, மாத்யூ பாட்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.
இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (27) சுமாரான துவக்கம் கொடுத்தார். சஜித் கான் 'சுழலில்' போப் (29), ஜோ ரூட் (34), ஹாரி புரூக் (9) போல்டாகினர். பொறுப்பாக ஆடிய பென் டக்கெட் (114) சதம் கடந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (1) ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 236 ரன் எடுத்திருந்தது. ஜேமி ஸ்மித் (12), பிரைடன் கார்ஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 4, நோமன் அலி 2 விக்கெட் கைப்பற்றினர்.