தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா ‘ஏ’ அணி அபாரம்: துருவ் ஜுரெல், திலக் வர்மா அரைசதம்

இந்தியா ‘ஏ’ அணி அபாரம்: துருவ் ஜுரெல், திலக் வர்மா அரைசதம்

இந்தியா ‘ஏ’ அணி அபாரம்: துருவ் ஜுரெல், திலக் வர்மா அரைசதம்


ADDED : நவ 09, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லின்கன்: அதிகாரப்பூர்வமற்ற 3வது டெஸ்டில், கேப்டன் துருவ் ஜுரெல், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாச, இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 464 ரன் குவித்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் (4 நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் ‘டிரா’ ஆனது. நேற்று, லின்கனில் 3வது, கடைசி டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 227/2 ரன் எடுத்திருந்தது. சுதர்சன் (77), கேப்டன் துருவ் ஜுரெல் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று, 2ம் நாள் ஆட்டம் நடந்தது. இந்தியா ‘ஏ’ அணிக்கு சாய் சுதர்சன் (88) நம்பிக்கை தந்தார். பிரெட் ரான்டெல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய துருவ் ஜுரெல் (71) அரைசதம் கடந்தார். ரவிந்திர ஜடேஜா (25) நிலைக்கவில்லை. பின் இணைந்த திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஜோடி கைகொடுத்தது. வாஷிங்டன், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 464/5 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. திலக் (81 ரன், 2X6, 5X4), வாஷிங்டன் (2X4) அவுட்டாகாமல் இருந்தனர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு, பிரசித் கிருஷ்ணா தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ரைஸ் மரியு (0), கர்டிஸ் ஹீபி (19) வெளியேறினர். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 36/2 ரன் எடுத்து, 428 ரன் பின்தங்கி இருந்தது. பாக்ஸ்கிராப்ட் (10), கிப்சன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா ‘ஏ’ சார்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us