ADDED : நவ 04, 2026 03:19 PM

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து ‘ஏ’, இந்தியா ‘ஏ’ அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 346, நியூசிலாந்து ‘ஏ’ அணி 424 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி, 32/0 ரன் எடுத்து, 46 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பாக்ஸ்கிராப்ட் பந்தில் சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால், 119 பந்தில் சதம் கடந்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பின் வீசப்பட்ட 2வது ஓவரில் யாஷ், சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்சில் 282/2 ரன் எடுத்து, இந்திய அணி 204 ரன் முன்னிலை பெற்றிருந்த போது, போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ஸ்வால் 155 ரன் (162 பந்து, 5X6, 15X4), யாஷ் 100 ரன்னுடன் (122 பந்து, 9X4) அவுட்டாகாமல் இருந்தனர்.
