தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/முத்திரை பதித்த முகேஷ் குமார்: ‘விறுவிறு’ கட்டத்தில் 2வது போட்டி

முத்திரை பதித்த முகேஷ் குமார்: ‘விறுவிறு’ கட்டத்தில் 2வது போட்டி

முத்திரை பதித்த முகேஷ் குமார்: ‘விறுவிறு’ கட்டத்தில் 2வது போட்டி


ADDED : நவ 03, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறைஸ்ட்சர்ச்: இரண்டாவது போட்டி யில் இந்திய பவுலர்கள் அசத்த, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 424 ரன் எடுத்தது.

நியூசிலாந்து சென்று உள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 346/10 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 218/3 ரன் எடுத்திருந்தது. பாயில் (107), டீன் பாக்ஸ்கிராப்ட் (80) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று, 3ம் நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு மாத்யூ பாயில் (110), டீன் பாக்ஸ்கிராப்ட் (93) நம்பிக்கை தந்தனர். முகேஷ் குமார் ‘வேகத்தில்’ மிட்செல் ஹே (31), கிறிஸ்டியன் கிளார்க் (41), பிரேசர் ஷீட் (40) வெளியேறினர். சிராஜ் பந்தில் பிரெட் ரான்டெல் (5) அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில் ஜராட் மெக்கே (33) சிக்கினார். நியூசி லாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 424 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா ‘ஏ’ சார்பில் முகேஷ் குமார் 5, முகமது சிராஜ் 4, வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின், 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘ஏ’ அணி, ஆட்டநேர முடிவில் 32/0 ரன் எடுத்து, 46 ரன் பின்தங்கி இருந்தது. ஜெய்ஸ்வால் (20), சாய் சுதர்சன் (11) அவுட்டாகாமல் இருந்தனர். இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ பேட்டர்கள் ரன் மழை பொழிந்தால், நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்து வெற்றி பெற முயற்சிக்கலாம்.

ரிஷாப் பன்ட் எப்படி


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட், நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் (நவ. 7–10, லிங்கன்) இந்தியா ‘ஏ’ அணி சார்பில் பங்கேற்க இருந்தார். ஆனால், சமீபத்திய இரானி கோப்பையில் விலா பகுதியில் தசைபிடிப்பால் பாதிக்கப்பட்ட இவர், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இப்போட்டியில் இருந்து விலகினார்.
தற்போது பெங் களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., சிறப்பு மையத்தில் பயிற்சி யில் ஈடுபட்டு வரும் பன்ட், உடற் தகுதியை நிரூபித்தால் நேரடியாக சீனியர் டெஸ்ட் அணியில் இணையலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us