/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சுப்மன்-ஜெய்ஸ்வால் போட்டி * இந்திய அணி தேர்வு எப்போது
/
சுப்மன்-ஜெய்ஸ்வால் போட்டி * இந்திய அணி தேர்வு எப்போது
சுப்மன்-ஜெய்ஸ்வால் போட்டி * இந்திய அணி தேர்வு எப்போது
சுப்மன்-ஜெய்ஸ்வால் போட்டி * இந்திய அணி தேர்வு எப்போது
ADDED : ஏப் 18, 2024 12:23 AM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற சுப்மன்-ஜெய்ஸ்வால், ஷிவம் துபே-ரிங்கு சிங் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஜூன் 1-29ல் நடக்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடாவுடன் இடம் பெற்றுள்ளது.
நியூயார்க்கில் ஜூன் 9ல் நடக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏப்ரல் மாத கடைசியில் அறிவிக்கப்பட உள்ளது.
யார் துவக்கம்
ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கோலி, சூர்யகுமார், பும்ரா, ஜடேஜா, ரிஷாப் பன்ட், அர்ஷ்தீப் சிங், சிராஜ், குல்தீப், ஹர்திக் பாண்ட்யா என 10 வீரர்கள் எப்போதும் போல இடம் பெற்று விடுவர். துவக்க வீரராக சுப்மன் கில், ஜெய்ஸ்வால் என யார் இடம் பெறுவது என்பதில் பலத்த போட்டி காணப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கண்டுபிடிப்பு ஜெய்ஸ்வால். இங்கிலாந்து தொடரில் ரன்மழை பொழிந்தார், ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் தேர்வாளர்கள் இவரை கைவிட மாட்டர். சுப்மன் அதிகமாக ரன் குவிக்கும் பட்சத்தில் இருவரும் இடம் பெறலாம்.
மறுபக்கம் ஷிவம் துபே, ரிங்கு சிங் இடையே 'பினிஷர்' இடத்தை பிடிக்க போட்டி நிலவுகிறது. 'ரிசர்வ்' சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு அக்சர் படேல், சகால், பிஷ்னோய் என மும்முனை போட்டி காணப்படுகிறது.
விக்கெட் கீப்பராக லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் போட்டியில் உள்ளனர்.
எதிர்பார்க்கப்படும் உத்தேச அணி
உலக கோப்பை தொடரில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படும் 20 பேர் (15+5) கொண்ட உத்தேச இந்திய அணி விபரம்:
பேட்டர் (6): ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கோலி, சூர்யகுமார், ரிங்கு சிங்.
ஆல் ரவுண்டர் (4): ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷிவம் துபே, அக்சர் படேல்.
பவுலர் (3 சுழல்): குல்தீப் யாதவ், சகால், பிஷ்னோய்.
பவுலர் (4 வேகம்): பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
விக்கெட் கீப்பர் (3): ரிஷாப் பன்ட், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன்.
வருமா அறிமுகம்
ஐ.பி.எல்., தொடரில் ரியான் பராக், மயங்க் யாதவ், அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி சிறப்பாக செயல்பட்டாலும், உலக கோப்பை தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அடுத்து வரும் ஜிம்பாப்வே, இலங்கை என இரு தரப்பு தொடருக்கான இந்திய அணியில் அறிமுகம் ஆகலாம்.
ஒருவேளை மயங்க் யாதவ், ஹர்ஷித், ஆகாஷ் உள்ளிட்டோர் உலக கோப்பை செல்லும் இந்திய அணி வீரர்களுக்காக வலைப்பயிற்சியில் பந்துவீச அழைக்கப்படலாம்.
பாதிப்பு தரும் 'இம்பேக்ட்'
ஐ.பி.எல்., தொடரில் உள்ள 'இம்பேக்ட்' விதி காரணமாக, 'ஆல் ரவுண்டர்' தேவை குறைந்து விட்டது. ஆனால் இந்திய அணி என்று வரும் போது, பாதிப்பை ஏற்படுத்துகிறது. சென்னை அணியின் ஷிவம் துபே, 'இம்பேக்ட்' வீரராக (பேட்டர்) மட்டும் வருவதால் இவரது பவுலிங் திறன் குறித்து சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இதேபோல டிவாட்யா (குஜராத்) நல்ல பினிஷர். மாறாக பேட்டராக மட்டும் விளையாடுவதால், பவுலிங் செய்வதில்லை. ஆனால், முழு உடற்தகுதி இல்லாத சூழலிலும் பாண்ட்யா (மும்பை), பவுலிங்கும் செய்வதால், தேர்வாளர்கள் இவர் பக்கம் திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது.

