UPDATED : அக் 04, 2025 11:24 PM
ADDED : அக் 03, 2025 11:03 PM

புதுடில்லி: ஒருநாள் போட்டிக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். கேப்டன் பதவி மறுக்கப்பட்ட ரோகித் சர்மா, கோலி வாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 5 'டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன. 'டி-20' போட்டிகள் கான்பெரா (அக். 29), மெல்போர்ன் (அக். 31), ஹோபர்ட் (நவ. 2), கோல்டு கோஸ்ட் (நவ. 6), பிரிஸ்பேனில் (நவ. 8) நடக்கவுள்ளன.
புதிய கேப்டன்
இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. வரும் 2027 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் 'சீனியர்' ரோகித் சர்மாவுக்குப் 38, பதில், இளம் துவக்க வீரர் சுப்மன் கில் 26, ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்கும் இவர், 'டி-20' அணி துணைக் கேப்டனாக உள்ளார். விரைவில் மூன்று வித அணிக்கும் கேப்டனாகலாம்.
கோலி இடம்
சாம்பியன்ஸ் டிராபி நாயகன் ஷ்ரேயஸ், துணைக் கேப்டனாக தேர்வானார். ரோகித், கோலி என இருவரும் 7 மாதங்களுக்கு பின் இந்திய அணியில் இடம் பெற்றனர். பும்ராவுக்கு ஒருநாள் தொடரில் மட்டும் ஓய்வு தரப்பட்டது.
அணி விபரம்: சுப்மன் (கேப்டன்), ஷ்ரேயஸ், ரோகித் சர்மா, கோலி, அக்சர், லோகேஷ் ராகுல், நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், ஜெய்ஸ்வால்.