தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா இந்தியா * ரவி சாஸ்திரி நம்பிக்கை

'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா இந்தியா * ரவி சாஸ்திரி நம்பிக்கை

'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா இந்தியா * ரவி சாஸ்திரி நம்பிக்கை


ADDED : ஆக 14, 2024 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ''ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லும் தகுதி உள்ளது,'' என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2018-19, 2020-21 என அடுத்தடுத்த தொடரில் அசத்திய இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, இம்முறை ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22-26ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.

இதில் 'ஆஸ்திரேலியா 3-1 என வெல்லும்' என முன்னாள் கேப்டன் பாண்டிங் தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்து நடந்த இரு தொடரிலும் இந்திய அணி கோப்பை வென்றது. இம்முறை இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி, சிராஜ், அஷ்வின், ஜடேஜா தவிர, புதிய பவுலர்களும் சிறப்பாக உள்ளனர். ரோகித், கோலி என பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

இதனால், வரும் தொடரும் தொடர் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கப் போகிறது. இங்கு 'ஹாட்ரிக்' கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனெனில் இந்திய பவுலர்கள், பேட்டர்கள் உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தி விடலாம். தவிர இத்தொடர் இந்திய அணியின் பேட்டிங்கிற்கும், ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கிற்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us