sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பஞ்சாப் அணி அபார வெற்றி * மும்பை அணி ஏமாற்றம்

/

பஞ்சாப் அணி அபார வெற்றி * மும்பை அணி ஏமாற்றம்

பஞ்சாப் அணி அபார வெற்றி * மும்பை அணி ஏமாற்றம்

பஞ்சாப் அணி அபார வெற்றி * மும்பை அணி ஏமாற்றம்


ADDED : மே 26, 2025 11:34 PM

Google News

ADDED : மே 26, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: மும்பை அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பிடிக்கலாம் என்ற நிலையில் 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயஷ் பீல்டிங் தேர்வு செய்தார். கடந்த 2013க்குப் பின் இம்மைதானத்தில் நடந்த 5 போட்டிகளில் ஒன்றில் (2025) மட்டும் வென்ற சோகத்துடன் மும்பை களமிறங்கியது.

சூர்யகுமார் அரைசதம்

மும்பை அணிக்கு ரிக்கிள்டன், ரோகித் சர்மா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மும்பை அணி 5 ஓவரில் 45/0 ரன் எடுத்த நிலையில் ரிக்கிள்டனை (27 ரன்) வெளியேற்றினார் யான்சென். நீண்டநேரம் திணறிய ரோகித் (24 ரன், 21 பந்து), ஹர்பிரீத் 'சுழலில்' சிக்கினார். திலக் வர்மா (1), வில் ஜாக்ஸ் (17) நிலைக்கவில்லை.

சூர்யகுமாருடன் இணைந்தார் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. ஹர்பிரீத் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பாண்ட்யா, அர்ஷ்தீப் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். மீண்டும் வந்த யான்சென், இம்முறை பாண்ட்யாவை (26 ரன், 15 பந்து) வெளியேற்றினார்.

வைஷாக் வீசிய 19 வது ஓவரின் முதல் இரு பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார் நமன் திர். சூர்யகுமார் தன் பங்கிற்கு 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 23 ரன் எடுக்கப்பட்டன.

சூர்யகுமார் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் நமன் திர் (20 ரன், 12 பந்து), சூர்யகுமார் (57) அவுட்டாகினர். மும்பை அணி 20 ஓவரில் 184/7 ரன் எடுத்தது.

சூப்பர் ஜோடி

பின் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் (13), பிரியான்ஷ் ஆர்யா ஜோடி துவக்கம் கொடுத்தது. அடுத்து ஆர்யா, இங்லிஸ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 12 ஓவரில் 120/1 ரன் எடுத்து, வெற்றியை நெருங்கியது.

2வது விக்கெட்டுக்கு 59 பந்தில் 109 ரன் சேர்த்த போது, சான்ட்னர் சுழலில் ஆர்யா (62) அவுட்டானார். மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்லிஸ், 73 ரன் எடுத்தார். சான்ட்னர், பவுல்ட் பந்தில் ஸ்ரேயஷ், தலா ஒரு சிக்சர் அடிக்க வெற்றி எளிதானது. பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயஷ் (26), வதேரா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

புதிய சாதனை

'டி-20' கிரிக்கெட்டில் அதிக முறை 25 அல்லது அதற்கும் மேல் என ரன் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் மும்பையின் சூர்யகுமார். இவர் தொடர்ந்து 14வது முறையாக இதுபோல ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்காவின் பவுமா (13) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

* தலா 11 முறை இதுபோல அசத்திய பிராட் ஹாட்ஜ் (ஆஸி.,), ருடால்ப் (தெ.ஆப்.,), சங்ககரா (இலங்கை), கிறிஸ் லின் (ஆஸி.,), கைல் மேயர்ஸ் (வெ.இண்டீஸ்) 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

632 ரன்

மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் சூர்யகுமார். இவர் 14 போட்டியில் 632 ரன் எடுத்துள்ளார். சச்சின் (618, 2010), சூர்யகுமார் (605, 2023), சச்சின் (553, 2011), சிம்மன்ஸ் (540, 2015), ரோகித் (538, 2013) அடுத்து உள்ளனர்.

சகால் காயம்

பிரிமியர் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சகால் (ரூ. 18 கோடி, பஞ்சாப்). 12 போட்டியில் 14 விக்கெட் சாய்த்தார். கைவிரல் காயம் காரணமாக தொடர்ந்து இரண்டாவது போட்டியில் நேற்று களமிறங்கவில்லை. 'பிளே ஆப்' சுற்றில் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us