UPDATED : ஆக 27, 2026 11:01 PM
ADDED : ஆக 27, 2026 09:55 PM

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தின் ஜோர்டான் காக்ஸ், ஜேமி ஸ்மித் அரைசதம் விளாசினர்.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் மழையால் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான், 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு எமிலியோ (8), டக்கெட் (17), கேப்டன் ஜோ ரூட் (4) ஏமாற்றினர். ஹாரி புரூக் (15) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 77/4 ரன் எடுத்து திணறியது. பின் இணைந்த ஜோர்டான் காக்ஸ், டான் லாரன்ஸ் ஜோடி ஆறுதல் தந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது லாரன்ஸ் (17) 'ரன்-அவுட்' ஆனார். அலி உஸ்மான் பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த காக்ஸ் அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது காக்ஸ் (55) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய ஜேமி ஸ்மித், தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இவர், 61 ரன்னில் அவுட்டானார். ஆர்ச்சர் (14) சோபிக்கவில்லை.
தேநீர் இடைவேளைக்கு பின், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 248/9 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அட்கின்சன் (34), ஜோஷ் டங் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
