தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மதுரை 'ஹாட்ரிக்' வெற்றி: சேலம் அணியை வீழ்த்தியது

மதுரை 'ஹாட்ரிக்' வெற்றி: சேலம் அணியை வீழ்த்தியது

மதுரை 'ஹாட்ரிக்' வெற்றி: சேலம் அணியை வீழ்த்தியது


ADDED : ஆக 10, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய மதுரை அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலம் அணி ஏமாற்றியது.

திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

மதுரை அணிக்கு ராம் குமார், சித்தார்த் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த போது பொய்யாமொழி பந்தில் ராம் குமார் (36) அவுட்டானார். சதுர்வேத் (5), கேப்டன் பாலசந்தர் அனிருத் (7) ஏமாற்றினர். ஹரி நிஷாந்த் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய சித்தார்த், 34 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 60 ரன்னில் (3X6, 5X4) ஆட்டமிழந்தார். சரவணன் (19), அதீக் (39) கைகொடுத்தார்.

மதுரை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. ராஜலிங்கம் (13) அவுட்டாகாமல் இருந்தார். சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் கைப்பற்றினார்.

சவாலான இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு கவின் (22), ஹரி நிஷாந்த் (21) சுமாரான துவக்கம் கொடுத்தனர். சன்னி சாந்து (0), கேப்டன் அபிஷேக் (5), ஹரிஷ் குமார் (0) ஏமாற்றினர். நிதிஷ் ராஜகோபால் (20), ராஜேந்திரன் விவேக் (28) ஆறுதல் தந்தனர். கார்த்திக் மணிகண்டன் (12) நிலைக்கவில்லை. சரவணன் வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய முகமது (30) நம்பிக்கை தந்தார்.

சேலம் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அஜித் ராம் (10), பொய்யாமொழி (3) அவுட்டாகாமல் இருந்தனர். மதுரை அணி சார்பில் தீபேஷ் 3, ரோஹன், விக்னேஷ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ஏற்கனவே திருச்சி, கோவை அணிகளை வீழ்த்திய மதுரை அணி, தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us