தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'சர்ப்ரைஸ்' கொடுப்பாரா சர்பராஸ்: இலங்கை டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பு

'சர்ப்ரைஸ்' கொடுப்பாரா சர்பராஸ்: இலங்கை டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பு

'சர்ப்ரைஸ்' கொடுப்பாரா சர்பராஸ்: இலங்கை டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 10, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: விடாமுயற்சியால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் சர்பராஸ் கான். உடல் எடையை 17 கிலோ குறைத்துள்ள இவர், இலங்கை மண்ணில் அசத்த காத்திருக்கிறார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஆக. 15ல் காலேயில் துவங்குகிறது. இதற்கான, இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக பேட்டர் சாய் சுதர்சன் (வலது கால் பெருவிரல் வலி) உடற்தகுதி இல்லாததால் விலகினார். இவருக்கு பதிலாக மஹாராஷ்டிராவின் சர்பராஸ் கான் 28, தேர்வு செய்யப்பட்டார்.

காஷ்மீரில் பயிற்சி: கடந்த 2024ல் இந்திய அணியில் (எதிர், இங்கி., ராஜ்கோட்) அறிமுகமானார் சர்பராஸ். கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக வான்கடே டெஸ்டில் (2024) பங்கேற்றார். 6 டெஸ்டில் 371 ரன் எடுத்தார். இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட போதும், மனம் தளரவில்லை. மும்பையில் மழை பெய்ததால், காஷ்மீர் சென்று கடின பயிற்சி மேற்கொண்டார். அரிசி சாதம், சர்க்கரை, பேக்கரி வகை உணவுகளை தவிர்த்தார். கிரீன் டீ, மீன், சிக்கன், முட்டை என சத்தான உணவுக்கு மாறினார். கடந்த ஒன்றரை ஆண்டில், உடல் எடையை 17 கிலோ குறைத்தார். தற்போது 'ஸ்லிம்' ஆக உள்ளார். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப, 'பிட்' ஆக இருக்கிறார்.

தொடரும் ரன் மழை: உள்ளூர் தொடரிலும் அசத்தினார் சர்பராஸ். 2025ல் முஷ்டாக் அலி 'டி-20' தொடரில் மும்பை அணிக்காக 329 ரன் (7 போட்டி) விளாசினார். ரஞ்சி கோப்பையில், 429 ரன் (7 போட்டி) குவித்தார். 2026ல் பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக 25 பந்தில் 50 ரன் (எதிர், பெங்களூரு) எடுத்தார். இப்படி ரன் மழை பொழிய, 20 மாதங்களுக்கு பின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

காம்பிர் கருணை: இலங்கை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது. 'ஸ்பின்னர்'களை சமாளிக்கும் திறன் பெற்றவர் சர்பராஸ். 'ரிவர்ஸ் ஸ்வீப்' உட்பட பல்வேறு 'ஷாட்' அடிப்பதில் வல்லவர். இதன் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இலங்கை லெவன் அணிக்கு எதிரான சமீபத்திய பயிற்சி போட்டியில் தேவ்தத் படிக்கல் 3வது வீரராக களமிறங்கி 142 ரன் எடுத்தார். இது, சர்பராஸ் கானுக்கு சிக்கல் தரலாம். துவக்கத்தில் ராகுல், ஜெய்ஸ்வால், 3வது படிக்கல், 4வது கேப்டன் சுப்மன் கில், 5வது ரிஷாப்/துருவ் ஜுரல், 6வது இடத்தில் ரவிந்திர ஜடேஜா வரலாம். பேட்டிங்கை பலப்படுத்த பயிற்சியாளர் காம்பிர் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால், சர்பராஸ் கான் 'லெவனில்' இடம் பெறலாம்.

உழைப்புக்கு பலன்

சர்பராஸ் கானின் தந்தையும் அவரது பயிற்சியாளருமான நவ்ஷாத் கான் வெளியிட்ட செய்தியில்,'இரவு நேரத்தை கடந்து செல்ல, சூரியன் உதிக்கும் வரை காத்திருக்க வேண்டும். அது போல வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையாக இருப்பது அவசியம். கடின உழைப்பின் பக்கம் தான் அதிர்ஷ்டம் இருக்கும்,' என தெரிவித்துள்ளார். இவரது வார்த்தைகள் சர்பராஸ் கானிற்கு ஊக்கம் அளிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us