மார்க்ரம், ஆக்கர்மென் அரைசதம்: தென் ஆப்ரிக்கா அணி அபாரம்
மார்க்ரம், ஆக்கர்மென் அரைசதம்: தென் ஆப்ரிக்கா அணி அபாரம்
UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 09:37 PM

கேப்டவுன்: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் தொடர் 1–1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி டெஸ்ட், நேற்று கேப்டவுனில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்
தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம், ஆக்கர்மென் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். மார்க்ரம் டெஸ்ட் அரங்கில் 15வது அரைசதம் கடந்தார். இரண்டாவது டெஸ்டில் விளையாடும் ஆக்கர்மென், முதல் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன் சேர்த்தது.
இந்நிலையில் ஆக்கர்மென், 94 பந்தில் 95 ரன் (12x4, 2x6) எடுத்து, லியான் சுழலில் சிக்க, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுபக்கம் ஹேசல்வுட் ‘வேகத்தில்’ மார்க்ரம் (78) வெளியேறினார். கேப்டன் பவுமா, 3வது பந்தில் ‘டக்’ அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்தில் பிரீட்ஸ்கே (2), அரைசதம் அடித்த பெடிங்ஹாம் (50), முல்டர் (0) அவுட்டாகினர்.
203/1 என இருந்த தென் ஆப்ரிக்க, 232/6 என திணறியது. பின் இணைந்த ரிக்கிள்டன் (37), யான்சென் (43) ஜோடி அணியை மீட்டது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 313/6 ரன் எடுத்திருந்தது.
