/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்: ரிஸ்வான் நியமனம்
/
பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்: ரிஸ்வான் நியமனம்
பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்: ரிஸ்வான் நியமனம்
பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்: ரிஸ்வான் நியமனம்
ADDED : அக் 27, 2024 10:58 PM

லாகூர்: பாகிஸ்தான் ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா செல்லும் பாகிஸ்தான் அணி, மூன்று ஒருநாள் (நவ. 4, 8, 10), மூன்று 'டி-20' (நவ. 14, 16, 18) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் ஜிம்பாப்வே மண்ணில் மூன்று ஒருநாள் (நவ. 24, 26, 28), மூன்று 'டி-20' (டிச. 1, 3, 5) போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியின் ஒருநாள், 'டி-20' போட்டிகளுக்கு புதிய கேப்டனாக 'விக்கெட் கீப்பர் பேட்டர்' முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். துணை கேப்டனாக சல்மான் அலி ஆகா அறிவிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 'டி-20' தொடரில் ரிஸ்வானுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணியை சல்மான் அலி ஆகா வழிநடத்துவார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட பாபர் ஆசம், ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஆஸ்திரேலிய தொடருக்கு மட்டும் தேர்வாகினர். இவர்களுக்கு, ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான பகார் ஜமான், ஷதாப் கான் தேர்வு செய்யப்படவில்லை. ஜிம்பாப்வே தொடரில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.