/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தோல்விக்கு காரணம்: கேப்டன் ரோகித் விளக்கம்
/
தோல்விக்கு காரணம்: கேப்டன் ரோகித் விளக்கம்
ADDED : நவ 03, 2024 03:35 PM

மும்பை: ''ஒரு அணியாக இணைந்து சிறப்பாக விளையாட தவறியதால் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டோம்,'' என, இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மும்பையில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.
இதுகுறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ''ஒரு தொடரை இழப்பது, டெஸ்டில் தோல்வியடைவது எளிதல்ல. அதனை எளிதில் ஜீரணிக்க முடியாது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தொடரில் நியூசிலாந்து வீரர்கள், எங்களை விட மிகவும் நன்றாக விளையாடினர். நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். முதலிரண்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் போதுமான ரன் சேர்க்கவில்லை. மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 28 ரன் கூடுதலாக பெற்ற போதும், இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் ஏமாற்றினோம். ஒரு அணியாக இணைந்து விளையாட தவறியதால் தொடரை இழந்துவிட்டோம். இத்தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.