தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இலங்கை அணி ஏமாற்றம்

இலங்கை அணி ஏமாற்றம்

இலங்கை அணி ஏமாற்றம்


UPDATED : நவ 20, 2026 10:38 PM

ADDED : நவ 20, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 10:38 PM ADDED : நவ 20, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராவல்பிண்டி: இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட், ராவல்பிண்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 98, பாகிஸ்தான் 325 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 309/9 ரன் எடுத்திருந்தது.

நேற்று, 4ம் நாள் ஆட்டம் நடந்தது. முகமது அபாஸ் பந்தில் அசிதா பெர்ணான்டோ (2) அவுட்டானார். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 316 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மிலன் ரத்னாயகா (66) அவுட்டாகாமல் இருந்தார்.

பின், 90 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அஸான் அவைஸ் (32*), ஆமர் ஜமால் (34*) கைகொடுத்தனர். 2வது இன்னிங்சில் 90/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி, தொடரை 1-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us