sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பாகிஸ்தான் சுலப வெற்றி * வீழ்ந்தது கனடா அணி

/

பாகிஸ்தான் சுலப வெற்றி * வீழ்ந்தது கனடா அணி

பாகிஸ்தான் சுலப வெற்றி * வீழ்ந்தது கனடா அணி

பாகிஸ்தான் சுலப வெற்றி * வீழ்ந்தது கனடா அணி


UPDATED : ஜூன் 11, 2024 11:41 PM

ADDED : ஜூன் 11, 2024 10:49 PM

Google News

UPDATED : ஜூன் 11, 2024 11:41 PM ADDED : ஜூன் 11, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: கனடாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது.

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. நேற்று நியூயார்க்கில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின. ஏற்கனவே முதல் இரு போட்டியில் அமெரிக்கா, இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் களமிறங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், பீல்டிங் தேர்வு செய்தார்.

விக்கெட் சரிவு

கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன், நவ்னீத் தலிவல் ஜோடி துவக்கம் கொடுத்தது. மூன்றாவது ஓவரை முகமது ஆமிர் வீசினார். இதன் முதல் பந்தில் பவுண்டரி அடித்த நவ்னீத் (4), கடைசி பந்தில் போல்டானார். கனடா அணி 3.1 ஓவரில் 24/1 ரன் எடுத்தது. இதன் பின் பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. அப்ரிதி, பர்கத் சிங்கை (2) வெளியேற்றினார்.

ஜான்சன் ஆறுதல்

ஹாரிஸ் ராப் பந்தில் ஜான்சன், இப்போட்டியில் முதல் சிக்சர் அடித்தார். மறுபக்கம் நிகோலஸ் (1) வீணாக ரன் அவுட்டானார். தொடர்ந்து பேட்டிங்கில் நம்பிக்கை தந்த ஜான்சன், அப்ரிதி பந்திலும் சிக்சர் அடித்து மிரட்டினார். ஹாரிஸ் ராப் வீசிய 10 வது ஓவரில் ஸ்ரேயாஸ் மோவ்வா (2), ரவிந்தர்பால் சிங் (2) அவுட்டாகினர். கனடா அணி 10 ஓவரில் 55/5 ரன் என திணறியது.

இமாத் வாசிம் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய ஜான்சன், 39 வது பந்தில் அரைசதம் கடந்தார். நியூயார்க் மைதானத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதம் இது. ஜான்சன் 44 பந்தில் 52 ரன் எடுத்து அவுட்டானார்.

சாத் பின் ஜாபர் 10 ரன் எடுத்தார். கனடா அணி 20 ஓவரில் 106/7 ரன் எடுத்தது. கலீம் (13), திலான் (9) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஆமிர், ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

சுலப வெற்றி

பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான், அயுப் (6) ஜோடி துவக்கம் தந்தது. பாபர் ஆசம் 33 ரன் எடுக்க, பகர் ஜமான் (4) ஏமாற்றினார். ரிஸ்வான் அரைசதம் விளாச, பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 107/3 ரன் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றி பெற்றது. ரிஸ்வான் (53), உஸ்மான் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

'யூ டியூபர்' சுட்டுக்கொலை

உலக கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் வீழ்ந்தது பாகிஸ்தான் அணி. இப்போட்டி குறித்து பாகிஸ்தானில் உள்ள லாகூர் மொபைல் மார்க்கெட் பகுதியில், 'யூ டியூபர்' சாத் அகமது, 'ஷூட்' செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாவலரிடம் கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த அவர், சாத் அகமதுவை துப்பாக்கியால் சுட்டார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போதும், வழியிலேயே மரணம் அடைந்தார் சாத் அகமது.

வங்கதேசத்தின் விதியா

'டி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க (113/6) அணியிடம், 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது வங்கதேசம் (109/7). இப்போட்டியின் 17 வது ஓவர் வீசினார் தென் ஆப்ரிக்காவின் பார்ட்மென். 2வது பந்து வங்கதேச வீரர் மகமதுல்லா கால் 'பேடில்' பட்டு, பவுண்டரிக்கு சென்றது. அப்போது அம்பயர் அவுட் கொடுத்தார்.

'ரிவியூ' செய்த மகமதுல்லா, தப்பினார். 'அவுட்' திரும்ப பெறப்பட்டது. ஆனால், பவுண்டரியாக சென்ற 4 ரன் ('லெக் பை') வங்கதேசத்திற்கு தரப்படவில்லை, இதுவே வங்கதேசம் தோல்விக்கு காரணம் என விமர்சனம் எழுந்தன.

ஐ.சி.சி., விதிப்படி அம்பயர் அவுட் கொடுத்தவுடன், அது 'டெட் பால்' ஆகிவிடும். மகமதுல்லாவுக்கு அவுட் தந்தவுடன் தான் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் பவுண்டரி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.






      Dinamalar
      Follow us