/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி அபாரம்: புச்சி பாபு பைனலில்
/
தமிழக அணி அபாரம்: புச்சி பாபு பைனலில்
ADDED : செப் 07, 2025 11:14 PM

சென்னை: புச்சி பாபு பைனலில் தமிழக அணியின் ராதாகிருஷ்ணன், விமல் குமார் அரைசதம் கடந்தனர்.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு தொடர் நடக்கிறது. சென்னையில் நடக்கும் பைனலில், டி.என்.சி.ஏ., 'பிரசிடென்ட் லெவன்', ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் ஐதராபாத் அணி 296/5 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் வருண் (67), நிதின் சாய் யாதவ் (37) கைகொடுக்க ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 376 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் வித்யுத் 4, திரிலோக், ஹேம்சுதேஷன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு ராதாகிருஷ்ணன், விமல் குமார், அரைசதம் கடந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 127 ரன் சேர்த்த போது விமல் (54) அவுட்டானார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 142/1 ரன் எடுத்திருந்தது. ராதாகிருஷ்ணன் (73), கேப்டன் பிரதோஷ் ரஞ்சன் பால் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.