/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பதிலடி
/
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பதிலடி
UPDATED : நவ 21, 2025 03:29 PM
ADDED : நவ 20, 2025 10:38 PM

பெர்த்: ஆஷஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி கொடுக்க, ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (0), ஜோ ரூட் (0), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (6) ஏமாற்றினர். ஹாரி புரூக் (52), போப் (46), ஜேமி ஸ்மித் (33), பென் டக்கெட் (21) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 7 விக்கெட் கைப்பற்றினார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். ஆர்ச்சர் 'வேகத்தில்' ஜேக் வெதரால்டு (0), மார்னஸ் லபுசேன் (9) வெளியேறினர். பிரைடன் கார்ஸ் பந்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (17), உஸ்மான் கவாஜா (2) அவுட்டாகினர். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் (21), கேமிரான் கிரீன் (24), அலெக்ஸ் கேரி (26), ஸ்டார்க் (12), ஸ்காட் போலந்து (0), ஸ்டோக்ஸ் 'வேகத்தில்' வெளியேறினர்.
ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்திருந்தது. லியான் (3) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5, ஆர்ச்சர், கார்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

