தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மாறிய பெர்த் ஆடுகளம்: இர்பான் பதான் ருசிகரம்

மாறிய பெர்த் ஆடுகளம்: இர்பான் பதான் ருசிகரம்

மாறிய பெர்த் ஆடுகளம்: இர்பான் பதான் ருசிகரம்


ADDED : நவ 23, 2024 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெர்த்: பெர்த் ஆடுகளத்தின் தன்மை சட்டென மாறியது. முதல் நாளில் ஆடுகளத்தில் ஈரப்பதம், புற்கள் காணப்பட்டதால், பந்துகள் 'பவுன்ஸ்' ஆகின. இரு அணிகளின் 'வேகங்களும்' போட்டுத்தாக்க, ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் சரிந்தன.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிலைமை தலைகீழானது. ஆடுகளம் பேட்டர்களின் சொர்க்கபுரியாக மாறியது. நல்ல வெயில் அடித்ததால், ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம் மாயமானது. காலையில் அதிக முறை 'ரோலர்' பயன்படுத்தியதால், ஆடுகளம் மந்தமானதாக மாறியது. இதன் காரணமாக கடைசி விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஹேசல்வுட் 110 பந்துகளை சமாளித்து, 25 ரன் சேர்த்தனர். இதே போல இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ராகுல் வலுவான அடித்தளம் அமைத்தனர். நேற்று 3 விக்கெட்டுகள் தான் வீழ்ந்தன.

ஆடுகளத்தை வைத்து கணக்கு செய்யும் ஆஸ்திரேலிய அணிக்கு நேற்றைய நாள் மோசமானதாக அமைந்தது. ஸ்டார்க், ஹேசல்வுட் உள்ளிட்ட 'வேகங்கள்' கை வலிக்க பந்துவீசியம் பலன் கிடைக்கவில்லை. சோர்வுடன் பெவிலியன் திரும்பினர்.

போகப் போக ஆடுகளத்தில் வெடிப்புகள் ஏற்படலாம். இது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது. இங்கு சுழல் வீரர் நேதன் லியான் 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரை தான் ஆஸ்திரேலியா பெரிதும் நம்பியுள்ளது. இவரை இந்திய பேட்டர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.

இந்திய முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான் நகைச்சுவையாக வெளியிட்ட செய்தியில்,'பெர்த் ஆடுகளத்தின் தன்மை டக்கென மாறியது. என் மனைவியின் மனநிலை கூட இவ்வளவு சீக்கிரம் மாறியது இல்லை,'என குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us