தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அடை மழைக்காலம் அரங்கில் குடைக்கோலம்... மூன்றாவது ஒருநாள் போட்டி ரத்து

அடை மழைக்காலம் அரங்கில் குடைக்கோலம்... மூன்றாவது ஒருநாள் போட்டி ரத்து

அடை மழைக்காலம் அரங்கில் குடைக்கோலம்... மூன்றாவது ஒருநாள் போட்டி ரத்து


UPDATED : நவ 11, 2026 12:00 AM

ADDED : நவ 10, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 12:00 AM ADDED : நவ 10, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாமில்டன்: மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு சவாலில் வென்ற இந்தியா,2–0 என முன்னிலை பெற்றது.

மூன்றாவது போட்டி நேற்று (நவ. 10), ஹாமில்டன், செடான் பார்க் மைதானத்தில் நடக்க இருந்தது. கணித்தது போலவே மழை குறுக்கிட, 40 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். பின் மீண்டும் மழை பெய்யவே, 20 ஓவர் போட்டி கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டி கைவிடப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

கேப்டன் மாற்றம்: அடுத்து நடக்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக, இப்போட்டியுடன் கேப்டன் சுப்மன் கில், விக்கெட் கீப்பர்–பேட்டர் ராகுல், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், சிராஜ் விலகுகின்றனர். எஞ்சிய நான்கு (நவ.13), ஐந்தாவது (நவ.15) ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்படுவார். விளையாடும் ‘லெவனில்’ ருதுராஜ், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

குளிர்காலம் போல



முதல் இரு போட்டிகளில் ஹரியானாவை சேர்ந்த இந்திய ‘வேகப்புயல்’ அன்ஷுல் கம்போஜ் (2/22, 2/25) அசத்தினார். 2026ல் பிரிமியர் லீக் தொடரில் சென்னை அணிக்காக 14 போட்டியில் 21 விக்கெட் வீழ்த்தினார். இவர் கூறுகையில்,‘‘13 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினேன். ஹரியானாவை போன்ற சூழல் தான் நியூசிலாந்தில் நிலவுகிறது. குளிர்காலத்தில் ஹரியானாவில் விளையாடுவதை போல உள்ளது. நியூசிலாந்து வானிலைக்கு ஏற்ப விரைவில் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்குள்ள ஆடுகளத்தில் பந்துகள் நன்கு ‘பவுன்ஸ்’ ஆகின்றன. சரியான அளவில் துல்லியமாக பந்துவீச வேண்டும். சென்னை அணிக்காக விளையாடியது சிறந்த பாடமாக அமைந்தது,’’ என்றார்.

போட்டி ‘டிரா’


லிங்கன்: நியூசிலாந்தின் லிங்கன் நகரில், இந்தியா ‘ஏ’, நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் மழை தொல்லை கொடுத்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 464/5 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. நியூசிலாந்து ‘ஏ’ அணி 36/2 ரன் எடுத்திருந்தது. 3, 4வது என இரண்டு நாள் ஆட்டமும் மழை காரணமாக ரத்தாக, போட்டி ‘டிரா’ ஆனது.



வருகிறார் ரிஷாப் பன்ட்


இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரு டெஸ்ட் போட்டிகள் (நவ.19–டிச.1) கொண்ட தொடரில் மோத உள்ளன. இதற்கான அணியில் விக்கெட்கீப்பர்–பேட்டர் ரிஷாப் பன்ட் இடம் பெற்றுள்ளார். உள்ளூர் இரானி கோப்பை தொடரின் போது இவருக்கு உடலின் இடது பக்கத்தில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியா, நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் பங்கேற்க முடியவில்லை. தற்போது உடல்நிலை தேறியுள்ள இவர், டெஸ்ட் தொடரில் விளையாட காத்திருக்கிறார்.
இது பற்றி பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ரிஷாப் முழு உடற்தகுதி பெற்றுவிட்டார். பெங்களூருவில் உள்ள உயர்திறன் மையத்தில் முதல் கட்ட பயிற்சி முடிந்தது. இன்று இரண்டாவது கட்ட பயிற்சியில் ஈடுபட உள்ளார். இதை வெற்றிகரமாக முடித்து, நவ. 12ல் நியூசிலாந்துக்கு புறப்படுவார்,’’என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us