/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சேலம் அணி 'திரில்' வெற்றி * 83 ரன் விளாசிய ஹரி நிஷாந்த்
/
சேலம் அணி 'திரில்' வெற்றி * 83 ரன் விளாசிய ஹரி நிஷாந்த்
சேலம் அணி 'திரில்' வெற்றி * 83 ரன் விளாசிய ஹரி நிஷாந்த்
சேலம் அணி 'திரில்' வெற்றி * 83 ரன் விளாசிய ஹரி நிஷாந்த்
ADDED : ஜூன் 10, 2025 11:25 PM

கோவை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம் அணி, 7 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருச்சி, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 25 நிமிடம் தாமதமாகத் துவங்கியது.
சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த், அபிஷேக் (10) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. சரவண குமார் போட்டியின் 8வது ஓவர் வீசினார். இதன் 4வது பந்தில் விளாசிய ஹரி நிஷாந்த், இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார். இவர் 28 வது பந்தில் அரைசதம் அடித்தார்.
செல்வ குமரனின் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்தார் சாந்து. மறுபக்கம் 58 பந்தில் 83 ரன் எடுத்த ஹரி நிஷாந்த், ஈஸ்வரன் பந்தில் அவுட்டானார். அதிசயராஜ் பந்தில் சாந்து (45 ரன், 27 பந்து) வெளியேறினார். சேலம் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. திருச்சி சார்பில் அதிசயராஜ், அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
கவுசிக் ஆறுதல்
அடுத்து களமிறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் சுரேஷ் குமார் 'டக்' அவுட்டாக, சுஜாய் (4) ஏமாற்றினார். வசீம் அகமது (16), முகிலேஷ் (2), சஞ்சய் (11) என யாரும் நிலைக்கவில்லை. திருச்சி அணி 48/6 ரன் என திணறியது. ராஜ்குமார் 26 பந்தில் 59 ரன் எடுத்து போராடினார்.
கடைசி 6 பந்தில் திருச்சி வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. பொய்யாமொழி வீசிய முதல் பந்தில் ஜெகதீசன் கவுசிக், பவுண்டரி அடித்தார். அடுத்த 4 பந்தில் 4 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. கவுசிக் (62 ரன், 39 பந்து), கடைசி பந்தில் அவுட்டானார். திருச்சி அணி 20 ஓவரில் 172/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது. முகமது 4 விக்கெட் சாய்த்தார்.