கோப்பை வென்றது வெ.இண்டீஸ்: இரண்டாவது டெஸ்ட் ‘டிரா’
கோப்பை வென்றது வெ.இண்டீஸ்: இரண்டாவது டெஸ்ட் ‘டிரா’
ADDED : நவ 10, 2026 03:30 PM

சில்ஹெட்: வங்கதேசம் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது டெஸ்டில் சில்ஹெட்டில் நடந்தது.
முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 356, வங்கதேசம் 386 ரன் எடுத்தன. 4வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 345/3 ரன் எடுத்து, 315 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று 5வது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. கவேம் 142 ரன்னில் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 398/6 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
பின், 369 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது வங்கதேசம். தன்ஜித் (21), கேப்டன் நஜ்முல் (14) ஏமாற்றினர். தவ்ஹித் 82, முஷ்பிகுர் 49 ரன் எடுத்தனர். இரண் டாவது இன்னிங்சில் 184/4 ரன் எடுத்திருந்த போது, போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப் பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 1–0 என தொடரை வசப்படுத்தி, கோப்பை கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக, முதல் இன்னிங்சில் 242, இரண்டாவது இன்னிங்சில் 82 ரன் என மொத்தம் 324 ரன் எடுத்த வங்கதேச வீரர் தவ்ஹித் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக, 2 டெஸ்டில் 16 விக்கெட் சாய்த்த வாரிகன் தேர்வானார்.
