தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணிக்கு என்னாச்சு ஏதாச்சு... தோல்வியால் ரசிகர்கள் மனம் புண்ணாச்சு

இந்திய அணிக்கு என்னாச்சு ஏதாச்சு... தோல்வியால் ரசிகர்கள் மனம் புண்ணாச்சு

இந்திய அணிக்கு என்னாச்சு ஏதாச்சு... தோல்வியால் ரசிகர்கள் மனம் புண்ணாச்சு


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக்லாந்து: நான்காவது ‘டி–20’ போட்டியில் பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, 87 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று சவாலில் வென்ற இந்தியா, தொடரை 3–0 என கைப்பற்றியது. நான்காவது போட்டி நேற்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் காயத்தில் (வலது தொடை தசை பிடிப்பு) இருந்து மீண்ட இஷான் கிஷான் இடம் பெற்றார். 15 வயது வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பை இழந்தார். அனுபவ புவனேஷ்வர் குமாருக்கு பதில் இளம் ‘வேகப்புயல்’ மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி துவக்கத்தில் திணறியது. மயங்க் யாதவ் ‘வேகத்தில்’ செய்பர்ட் (3), மிட்சல் (24) அவுட்டாகினர். 3 ஓவரில் 34/2 ரன் எடுத்து தவித்தது. ஆலன், 31 ரன் எடுத்தார். பெவன் ஜேக்கப்ஸ் (7) நிலைக்கவில்லை.

பிலிப்ஸ் சதம்



பின் இந்திய பவுலர்களுக்கு என்னாச்சு என தெரியவில்லை. துல்லியமாக பந்துவீச தவற, கிளன் பிலிப்ஸ், பிரேஸ்வெல் சேர்ந்து துவம்சம் செய்தனர். 5வது விக்கெட்டுக்கு 41 பந்தில் 115 ரன் சேர்த்தனர். 19 பந்தில் அரைசதம் எட்டிய பிரேஸ்வெல், 65 ரன்னுக்கு (25 பந்து, 4X4, 6X6) வெளியேறினார். அர்ஷ்தீப் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பிலிப்ஸ், 46 பந்தில் சதம் அடித்தார். கேப்டன் சான்ட்னர் (5) சோபிக்கவில்லை. நிதிஷ் குமார் பந்தில் கிளன் பிலிப்ஸ் 107 ரன்னுக்கு (49 பந்து, 6X4, 10X6) ‘பெவிலியன்’ திரும்பினார். கடைசி 5 ஓவரில் 85 ரன் எடுக்கப்பட்டன. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 259/7 ரன் குவித்தது. ஸ்மித் (6), மில்னே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் மடமட



கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி. ஜேக்கப் டபி வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் (4), இஷான் கிஷான் (0) நடையை கட்டினர். அபிஷேக் சர்மா (27), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (22) விரைவில் வெளியேற, 6 ஓவரில் 61/4 ரன் எடுத்து தத்தளித்தது. சான்ட்னர் ஓவரில் (9வது), நிதிஷ் குமார் ரெட்டி (21), அக்சர் படேல் (7) என இரு விக்கெட்டுகள் சரிய, நிலைமை மோசமானது. டபி ஓவரில் (12வது), நமன் திர் (28), அர்ஷ்தீப் சிங் (0) அடுத்தடுத்து வெளியேறினர். திலக் வர்மா (35) ஆறுதல் தந்தார். இந்திய அணி 20 ஓவரில் 172/9 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பிரின்ஸ் யாதவ் (18), மயங்க் யாதவ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார்.

ஐந்தாவது போட்டி நவ.1ல் ஹாமில்டனில் நடக்க உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்

நியூசிலாந்து 259/7 (20 ஓவர்)

பேட்டிங்

பிலிப்ஸ் 107(49)

பிரேஸ்வெல் 65(25)

பவுலிங்

மயங்க் 3/48 (4 ஓவர்)

அர்ஷ்தீப் 1/38 (4 ஓவர்)

இந்தியா 172/9 (20 ஓவர்)

பேட்டிங்

திலக் வர்மா 35(35)

நமன் திர் 28(13)

பவுலிங்

டபி 4/23 (4 ஓவர்)

சான்ட்னர் 2/24 (4 ஓவர்)

ரிசல்ட்: இந்தியா தோல்வி (87 ரன்)

இது மோசம்

சர்வதேச ‘டி–20’ அரங்கில் நேற்று இந்தியா இரண்டாவது மோசமான தோல்வியை (87 ரன்) பெற்றது. முதலிடத்தில், இங்கிலாந்திடம் 125 ரன் வித்தியாசத்தில் (2026, நாட்டிங்காம்) தோற்றது உள்ளது.

* நியூசிலாந்து அணி நேற்று தனது அதிகபட்ச ஸ்கோரை (259/7) பதிவு செய்தது. இது, ‘டி–20’ அரங்கில் இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன். முன்னதாக இங்கிலாந்து அணி 257/3 ரன் (சவுத்தாம்ப்டன், 2026) எடுத்திருந்தது.

* நியூசிலாந்து மண்ணில் இந்தியா தொடர்ந்து 10 ‘டி–20’ போட்டியில் (2020–26) வென்றிருந்தது. இது, நேற்று முடிவுக்கு வந்தது.

ஒரே ஓவரில் 32 ரன்

நிதிஷ் குமார் ஓவரில் (16வது) நியூசிலாந்தின் பிரேஸ்வெல் (1, 5 நோ–பால், 2, 6, 6, 6, 6) வெளுத்து வாங்க, மொத்தம் 32 ரன் எடுக்கப்பட்டன. ‘டி–20’ போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன் வழங்கிய இந்திய பவுலர் பட்டியலில் 2வது இடத்தை (தலா 32 ரன்) ஸ்டூவர்ட் பின்னி (எதிர், வெ.இ., 2016) உடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் ஷிவம் துபே (34 ரன், எதிர், நியூசி., 2020) உள்ளார்.

* சர்வதேச ‘டி–20’ போட்டியில், அதிக ரன் விட்டுக் கொடுத்த இந்திய பவுலர் பட்டியலில் 2வது இடத்தை (4 ஓவரில் தலா 64 ரன்) சஹால் (எதிர், தெ.ஆ., 2018), வருண் சக்ரவர்த்தி (எதிர், இங்கி., 2026) உடன் நிதிஷ் குமார் (எதிர், நியூசி., 2026) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் பிரசித் கிருஷ்ணா (68 ரன், எதிர், ஆஸி., 2023) உள்ளார்.

அர்ஷ்தீப் 150 விக்கெட்

சான்ட்னரை நேற்று அவுட்டாக்கிய அர்ஷ்தீப் சிங், சர்வதேச ‘டி–20’ அரங்கில் 150வது விக்கெட் (103 போட்டி) வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். ஒட்டுமொத்தமாக 9வது பவுலரானார்.

* குறைந்த பந்தில் 150 விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் (2143) 3வது இடம் பிடித்தார். முதல் இரு இடங்களில் ஹசரங்கா (இலங்கை, 2035), ரஷித் கான் (ஆப்கன், 2098) உள்ளனர்.

* சர்வதேச ‘டி–20’ அரங்கில் (ஐ.சி.சி., முழு உறுப்பு நாடுகள்) ஒரு ஆண்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலரானார் அர்ஷ்தீப் சிங் (40 விக்., 31 போட்டி, 2026).

* நிதிஷ் குமாரை அவுட்டாக்கிய சான்ட்னர் நேற்று சர்வதேச ‘டி–20’ அரங்கில் 150 விக்கெட் (142 போட்டி) வீழ்த்திய முதல் இடது கை ‘ஆப் ஸ்பின்னர்’ ஆனார். இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் (31) சாய்த்த நியூசிலாந்து பவுலரானார்

ஷ்ரேயஸ் முதலிடம்

இந்திய ‘டி–20’ கேப்டனாக ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பெற்றார் ஷ்ரேயஸ் ஐயர் (25 போட்டி, 666 ரன், 2026). ரோகித் சர்மாவை (29 போட்டி, 656 ரன், 2022) முந்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us