UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 09:37 PM
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து முன்னாள் இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங் கூறுகையில், ‘‘ஒருநாள் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். அபிஷேக், வைபவ் உள்ளிட்டோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, அவர்களின் திறமைக்கு அளிக்கப்படும் அநீதி,’’ என்றார்.
பவுலிங் காரணமா
இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில், ‘‘எங்களது பந்துவீச்சு எதிர்பார்த்தபடி அமையவில்லை. குறிப்பாக 3வது ஓவரில், ஆட்டத்தின் போக்கு நியூசிலாந்து பக்கம் சென்றது. கிளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடினார். இத்தோல்வியில் இருந்து வலுவாக மீண்டு வருவது குறித்து திட்டமிட வேண்டும். எங்கள் வீரர்கள் சிலர், இதுபோன்ற சிறிய மைதானத்தில் முதல் முறையாக விளையாடினர். இதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு விளையாடுவது எளிதானதல்ல. இவர்களுக்கு, இப்போட்டி சிறந்த பாடமாக அமைந்திருக்கும்,’’ என்றார்.
