/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா: உலக கோப்பை லீக் போட்டியில்
/
ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா: உலக கோப்பை லீக் போட்டியில்
ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா: உலக கோப்பை லீக் போட்டியில்
ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா: உலக கோப்பை லீக் போட்டியில்
ADDED : அக் 11, 2025 10:48 PM

விசாகப்பட்டனம்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய வீராங்கனைகள் எழுச்சி கண்டால் வெற்றி பெறலாம்.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இன்று விசாகப்பட்டனத்தில் நடக்கும் லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-1' ஆஸ்திரேலியா, 3வது இடத்தில் உள்ள இந்தியாவை சந்திக்கிறது.
முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது. மூன்று போட்டியிலும் இந்திய 'டாப்-ஆர்டர்' சோபிக்கவில்லை. பிரதிகா (105 ரன்) ஆறுதல் தருகிறார். உலக கோப்பைக்கு முன் விளையாடிய 14 ஒருநாள் போட்டியில், 928 ரன் (சராசரி 66.00) குவித்த ஸ்மிருதி மந்தா, கடந்த 3 போட்டியில் 54 ரன் (சராசரி 18.00) மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 19 ஒருநாள் போட்டியில், 4 சதம், 5 அரைசதம் உட்பட 916 ரன் (சராசரி 48.21) குவித்த இவர், இன்று எழுச்சி கண்டால் நல்ல துவக்கம் கிடைக்கும்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (49) ரன் மழை பொழிய வேண்டும். கடந்த போட்டிகளில் அரைசதம் விளாசிய ரிச்சா கோஷ் (131 ரன்), ஹர்லீன் தியோல் (107), தீப்தி சர்மா (82), ஸ்னே ராணா (81) மீண்டும் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
ஆறு பவுலர்: பலமான பேட்டிங் வரிசை கொண்ட 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இந்திய அணி 6 பவுலர்களுடன் களமிறங்கலாம். ஏற்கனவே 'வேகத்தில்' கிராந்தி (6 விக்.,), அமன்ஜோத் கவுர் (2), 'சுழலில்' தீப்தி சர்மா (7 விக்.,), ஸ்னே ராணா (6), ஸ்ரீ சரணி (3) உள்ளனர். கூடுதல் பவுலராக ராதா யாதவ் ('சுழல்') அல்லது அருந்ததி ரெட்டி ('வேகம்') தேர்வாகலாம்.
ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2ல் வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. பேட்டிங்கில் பெத் மூனே (121 ரன்), ஆஷ்லீ கார்ட்னர் (116), அலானா கிங் (55), லீட்ச்பீல்டு (55) நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் அனாபெல் சுதர்லாந்து (5 விக்.,), சோபி மோலினக்ஸ் (3), கிம் கார்த் (3), அலானா கிங் (3) அசத்துகின்றனர்.
இதுவரை...
ஒருநாள் போட்டி அரங்கில் இவ்விரு அணிகள் 59 முறை மோதின. இதில் இந்தியா 11, ஆஸ்திரேலியா 48ல் வெற்றி பெற்றன.