/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சச்சினை நெருங்குவாரா ஜோ ரூட்: பாண்டிங் கணிப்பு எப்படி
/
சச்சினை நெருங்குவாரா ஜோ ரூட்: பாண்டிங் கணிப்பு எப்படி
சச்சினை நெருங்குவாரா ஜோ ரூட்: பாண்டிங் கணிப்பு எப்படி
சச்சினை நெருங்குவாரா ஜோ ரூட்: பாண்டிங் கணிப்பு எப்படி
ADDED : ஆக 15, 2024 10:39 PM

துபாய்: ''சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்,'' என பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவர், 200 டெஸ்டில், 51 சதம் உட்பட 15,921 ரன் எடுத்துள்ளார். அடுத்த 6 இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (13,378 ரன்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (13,289), இந்தியாவின் டிராவிட் (13,288), இங்கிலாந்தின் குக் (12,472), இலங்கையின் சங்ககரா (12,400), இங்கிலாந்தின் ஜோ ரூட் (12,027) உள்ளனர். இதில் ஜோ ரூட் மட்டும் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அசத்திய ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ரன்னை எட்டிய 7வது வீரரானார். இவர், இன்னும் சிறிது காலம் விளையாடினால் சச்சின் சாதனையை முறியடிக்கலாம்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறுகையில், ''டெஸ்ட் அரங்கில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ஜோ ரூட்டிற்கு மட்டும் உள்ளது. 33 வயதாகும் ஜோ ரூட், சச்சினை விட 3894 ரன் பின்தங்கி உள்ளார். இவர் இன்னும் சிறிது காலம் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் சச்சின் சாதனையை முறியடிக்கலாம்,'' என்றார்.