UPDATED : டிச 29, 2024 10:18 PM
ADDED : டிச 28, 2024 11:03 PM

புலவாயோ: ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மோதும் முதல் டெஸ்டின் 4ம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது.
ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 425/2 ரன் எடுத்திருந்தது. ரஹ்மத் ஷா (231), கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி (141) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் மூன்றாவது விக்கெட்டுக்கு 364 ரன் சேர்த்த போது ரஹ்மத் ஷா (234) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஷாஹிதி 150 ரன்னை கடந்தார். ஆப்கானிஸ்தான் அணி 515/3 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை நீடித்ததால் போட்டி பாதியில் ரத்தானது. ஷாஹிதி (179), அப்சர் ஜஜாய் (46) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஒரு இன்னிங்ஸ் கூட முடியாததால், போட்டி 'டிரா'வில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.

