/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இந்தியா மூன்றாவது இடம் * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஓமனை வீழ்த்தியது
/
கால்பந்து: இந்தியா மூன்றாவது இடம் * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஓமனை வீழ்த்தியது
கால்பந்து: இந்தியா மூன்றாவது இடம் * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஓமனை வீழ்த்தியது
கால்பந்து: இந்தியா மூன்றாவது இடம் * 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஓமனை வீழ்த்தியது
ADDED : செப் 08, 2025 11:00 PM

ஹிசோர்: நேஷன்ஸ் கால்பந்து தொடரில் இந்திய அணி, மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலம் கைப்பற்றியது.
மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்றன. முதன் முறையாக இத்தொடரில் களமிறங்கிய இந்திய அணி, 'பி' பிரிவில் இடம் பெற்றது. 4 புள்ளியுடன் 2வது இடம் (3ல் தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வி) பெற்றது.
இதையடுத்து மூன்றாவது இடத்துக்கான போட்டியில், 133வது இடத்திலுள்ள இந்திய அணி, உலகத் தரவரிசையில் 79 வது இடத்திலுள்ள ஓமனை எதிர்கொண்டது. ஓமன் அணிக்கு ஜமீல் (55) ஒரு கோல் அடிக்க, இந்திய அணிக்கு உடாண்டா சிங் (80) தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். 90 நிமிட போராட்டத்தில் முடிவில் போட்டி 1-1 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய, போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. மீண்டும், இரு அணியும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. இந்திய அணிக்கு சாங்டே, ராகுல் பெக்கே, ஜித்தின் கோல் அடித்தனர். 4 வாய்ப்பு முடிவில் இந்தியா 3-2 என முன்னிலையில் இருந்தது.
கடைசி, 5வது வாய்ப்பை இந்தியாவின் உடாண்டா வீணடித்தார். ஓமனின் ஜமீல் அடித்த பந்தை, இந்திய அணி கேப்டன், கோல் கீப்பர், அனுபவ குர்பிரீத் சிங் சாந்து, வலது புறமாக பாய்ந்து தடுத்தார்.
முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, இத்தொடரில் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலம் வசப்படுத்தியது.
அடுத்து நடந்த பைனலில் நடப்பு சாம்பியன், உஸ்பெகிஸ்தான் மோதின. கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் அலிஜ்ஜோனோவ் கோல் அடிக்க, உஸ்பெகிஸ்தான் 1-0 என வென்று சாம்பியன் ஆனது.
1994 க்குப் பின்...
ஓமன் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமான போட்டியில், 1994க்குப் பின் இந்தியா பெற்ற முதல் வெற்றி இது. தவிர கடந்த 11 மோதலில் இந்தியா பெற்ற இரண்டாவது வெற்றி இது.