/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
போர்ச்சுகல் அணி வெற்றி: உலக கால்பந்து தகுதிச் சுற்றில்
/
போர்ச்சுகல் அணி வெற்றி: உலக கால்பந்து தகுதிச் சுற்றில்
போர்ச்சுகல் அணி வெற்றி: உலக கால்பந்து தகுதிச் சுற்றில்
போர்ச்சுகல் அணி வெற்றி: உலக கால்பந்து தகுதிச் சுற்றில்
ADDED : செப் 07, 2025 11:18 PM

யெரெவன்: உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் போர்ச்சுகல் அணி, ஆர்மீனியாவை வீழ்த்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார்.
கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் (2026, ஜூன் 11 - ஜூலை 19) நடக்கவுள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில், 54 அணிகள், 12 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
ஆர்மீனியாவில் நடந்த 'எப்' பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் போர்ச்சுகல், ஆர்மீனியா அணிகள் மோதின. இதில் போர்ச்சுகல் அணி 5-0 என வெற்றி பெற்றது. போர்ச்சுகல் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டே (21, 46வது நிமிடம்), பெலிக்ஸ் (10, 62வது) தலா 2, கேன்சிலோ (32வது) ஒரு கோல் அடித்தனர்.
அயர்லாந்து, ஹங்கேரி இடையிலான மற்றொரு 'எப்' பிரிவு போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.