ADDED : நவ 03, 2026 04:17 AM

புதுடில்லி: ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியில் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கத்தார் தலைநகர் தோஹாவில், வரும் நவ. 19–29ல் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை (50 ஓவர்) 2வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 26, 27) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள் பைனலில் (நவ. 29) விளையாடும்.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு கேப்டனாக திலக் வர்மா, துணை கேப்டனாக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டுள்ளனர். துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ரிங்கு சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்டர்களான பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா ‘ஏ’ அணி: திலக் வர்மா (கேப்டன்), ரஜத் படிதர் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, ரிங்கு சிங், பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா, சூர்யான்ஷ் ஷெட்ஜ், சாபாஷ் அகமது, விப்ராஜ் நிகம், ஹர்ஷ் துபே, தனுஷ் கொடியான், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷத் கான்.
