தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/விடை பெற்றது ‘பாரா’ ஆசியா: இந்திய நட்சத்திரங்கள் கலக்கல்

விடை பெற்றது ‘பாரா’ ஆசியா: இந்திய நட்சத்திரங்கள் கலக்கல்

விடை பெற்றது ‘பாரா’ ஆசியா: இந்திய நட்சத்திரங்கள் கலக்கல்


ADDED : அக் 25, 2026 02:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ‘பாரா’ ஆசிய விளையாட்டு நிறைவு பெற்றது. வண்ணமயமான நிறைவு விழாவில் இந்தியா சார்பில் மோனா, நிஷாத் மூவர்ணக்கொடி ஏந்தி வந்தனர்.

ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடந்தது. 45 நாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களமிறங்கினர். 18 விளையாட்டில் 489 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்தியா சார்பில் 112 வீரர், 56 வீராங்கனைகள் என, 168 பேர், 11 வகையான விளையாட்டில் பங்கேற்றனர். இம்முறை புதியதாக 81 ஆசிய பாரா சாதனை படைக்கப்பட்டன. 27 உலக சாதனை நிகழ்த்தப்பட்டன.

தடகளத்தில் அதிகபட்சம் 22 தங்கம், 19 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கம் வென்றது இந்தியா. அடுத்து பாட்மின்டனில் 3 தங்கம், 5 வெள்ளி உட்பட 16 பதக்கங்கள் வசப்படுத்தியது இந்தியா. ஒட்டுமொத்தமாக இந்தியா, எப்போதும் இல்லாத வகையில் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கம் கைப்பற்றியது. இதற்கு முன் 2023ல் இந்தியா 108 பதக்கம் (27+32+49) வென்றிருந்தது.

இதனிடையே, நேற்று நகோயாவில் உள்ள மிஜுஹோ பார்க், தடகள மைதானத்தில் நிறைவு விழா நடந்தது. ஆசிய பாராலிம்பிக் குழு தலைவர் மஜித் ராஷெட், போட்டிகள் நிறைவு பெற்றதை முறைப்படி அறிவித்தார். ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி கூறுகையில்,‘‘ பாரா நட்சத்திரங்களின் மன உறுதி, அர்ப்பணிப்பு, விளையாட்டு உணர்வு பாராட்டுக்குரியது. இது பாரா விளையாட்டின் அழகை வெளிப்படுத்தியது,’’ என்றார்.

வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் 2 தங்கம் வென்ற துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மோனா, நீளம், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் என இருவரும் இந்தியா சார்பில் மூவர்ணக்கொடி ஏந்தி வந்தனர். பின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

தமிழகம் மூன்றாமிடம்


பாரா ஆசிய விளையாட்டில் இந்திய நட்சத்திரங்கள் 97 பேர் 114 பதக்கம் வென்றனர். இதில் அதிகபட்சம் 24 பேர், ஹரியானாவை சேர்ந்தவர்கள். அடுத்து உ.பி., (13) உள்ளது. இந்த வரிசையில் தமிழகம் 3வது இடம் பெற்றது. தமிழகத்தை சேர்ந்த 9 வீரர், வீராங்கனைகள் 14 பதக்கம் வென்றுள்ளனர். இதில் சோலைராஜ் தர்மராஜ் (நீளம் தாண்டுதல்) பாரா பாட்மின்டனில் நவீன் சிவகுமார் துளசிமதி (பெண்கள் இரட்டையர்) தங்கம் கைப்பற்றினர். ராஜஸ்தான் (8), கர்நாடகா (7), மகாராஷ்டிரா (7), குஜராத் (6) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
* பாரா பாட்மின்டனில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கம் வென்றது. இதில் 2 தங்கம் உட்பட 10 பதக்கத்தை, தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைப்பற்றியுள்ளனர்.



அடுத்து தோஹா


மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டின் அடுத்த சீசன் (6வது), முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் வரும் 2030ல் நடக்க உள்ளது.



நான்காவது இடம்


பாரா ஆசிய விளையாட்டில் 30 தங்கம் உட்பட 114 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
‘டாப்–5’ நாடுகள்
‘ரேங்க்’ நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 207 117 111 435
2 ஜப்பான் 64 60 62 186
3 உஸ்பெகிஸ்தான் 45 49 51 145
4 இந்தியா 30 35 49 114
5 தென் கொரியா 29 38 33 100



ஜனாதிபதி வாழ்த்து


ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில்,‘ பாரா ஆசிய விளையாட்டில் முதன் முறையாக அதிகபட்சம் 114 பதக்கம் வென்றது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகளின் கடின உழைப்பு, விடா முயற்சி, தங்கள் மீது கொண்ட நம்பிக்கையால் கிடைத்த இந்த வெற்றி, நமது தேசத்தின் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. தடைகளை கண்டு அஞ்சாமல், பெரிய கனவுகளை கண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்க இது உதவும். அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்,’ என தெரிவித்துள்ளார்.



தமிழக நட்சத்திரங்கள்


பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக நட்சத்திரங்கள்.
வீரர்/வீராங்கனை தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துளசிமதி/பாட்மின்டன் 1 2 0 3
நவீன்/பாட்மின்டன் 1 0 1 2
சோலைராஜ்/நீளம் தாண்டுதல் 1 0 0 1
நித்யா ஸ்ரீ/பாட்மின்டன் 0 1 1 2
சிவராஜன்/பாட்மின்டன் 0 1 0 1
கஸ்துாரி/பவர்லிப்டிங் 0 1 0 1
மணிஷா/பாட்மின்டன் 0 0 2 2
ஜெகன்/டேபிள் டென்னிஸ் 0 0 1 1
பேபி சகானா/டேபிள் டென்னிஸ் 0 0 1 1
மொத்தம் 3 5 6 14



நான்கு பேர்... மூன்று பதக்கம்


பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் 4 பேர் தலா 3 பதக்கம் வென்றனர். வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றார். பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி, ஒரு தங்கம், 2 வெள்ளி கைப்பற்றினார். நீச்சல் வீரர்களான ரவி கார்த்திக் (2 வெள்ளி, ஒரு வெண்கலம்), ஹிமான்ஷு நந்தல் (3 வெண்கலம்) தலா 3 பதக்கம் வென்றனர்.
* மோனா அகர்வால் (துப்பாக்கி சுடுதல்), திலிப் கவித் (100, 400 மீ., ஓட்டம்), பிரனவ் சூர்மா (வட்டு எறிதல்), நிஷாத் குமார் (நீளம் தாண்டுதல்), சிம்ரன் சர்மா (100, 200 மீ., ஓட்டம்) தலா 2 தங்கம் கைப்பற்றினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us