தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


ADDED : அக் 25, 2026 02:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அமெரிக்காவில் நடக்கும் சிலிகான் வேலி ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 1–3 (11–5, 6–11, 4–11, 7–11) என்ற கணக்கில் மலேசியாவின் சிவசங்கரியிடம் தோல்வியடைந்தார்.

* கிரிக்கெட் லீக் தொடருக்கான மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ‘ஆல்–ரவுண்டர்’ போலார்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மும்பை அணிக்காக 189 போட்டிகளில் (3412 ரன்) விளையாடி உள்ளார்.

* கஜகஸ்தானில் நடக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், ‘கிரிகோ–ரோமன்’ 55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லலித் 0–9 என ஈரானின் பயாம் பர்சாத் அஹ்மதியிடம் தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீரர்களான லவ்பிரீத் சிங் (77 கிலோ), பிரின்ஸ் (82), ஹர்ஷ் (60) தகுதிச் சுற்றோடு திரும்பினர்.

* இந்திய வம்சாவளியான இங்கிலாந்தின் போதனா சிவானந்தன், சர்வதேச மாஸ்டர் (ஐ.எம்.) அந்தஸ்து பெற்ற இளம் (11 வயது) செஸ் வீராங்கனையானார். இதற்கு முன் ஹங்கேரியின் ஜுடிட் போல்கர், தனது 12வது வயதில் (1988) இச்சாதனை படைத்திருந்தார்.

* மும்பை ஓபன் ஐ.டி.எப்., டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் கரன் சிங் 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் சிராக் துஹானை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6–4, 6–2 என, அமெரிக்காவின் கேரெட் ஜான்சை தோற்கடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us