ADDED : அக் 25, 2026 02:36 PM

ஆமதாபாத்: காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் இரண்டாவது வெற்றி பெற்றன.
இந்தியாவின் ஆமதாபாத்தில் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய ஆண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்தை (46–26) வென்ற இந்தியா, நேற்று இரண்டாவது போட்டியில் உகாண்டாவை சந்தித்தது. முதல் பாதியில் 26–14 என இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, முடிவில் 44–30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 73–13 என மலேசியாவை வீழ்த்தியது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதில் இந்தியா 32–16 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
