/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பைனலில் ஹர்விந்தர் சிங் * ஆசிய பாரா வில்வித்தையில்...
/
பைனலில் ஹர்விந்தர் சிங் * ஆசிய பாரா வில்வித்தையில்...
பைனலில் ஹர்விந்தர் சிங் * ஆசிய பாரா வில்வித்தையில்...
பைனலில் ஹர்விந்தர் சிங் * ஆசிய பாரா வில்வித்தையில்...
ADDED : ஜூலை 03, 2025 10:53 PM

பீஜிங்: சீனாவின் பீஜிங்கில் ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான ரிகர்வ் பிரிவு அரையிறுதியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் கைப்பற்றிய இந்தியாவின் ஹர்விந்தர் சிங், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனாவின் ஜாவோ லிஜியு மோதினர். இப்போட்டி 5-5 என சமன் ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இருவரும் 9-9 என சம புள்ளி பெற்றனர். இருப்பினும் மையப்புள்ளிக்கு அருகில் வில் எய்த, ஹர்விந்தர் சிங் 6-5 என வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பைனலுக்கு முன்னேறிய ஹர்விந்தர் சிங், தாய்லாந்தின் நெட்சிரியை சந்திக்க உள்ளார்.
ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராகேஷ் குமார், சீனாவின் ஜின்லியாங் மோதினர். இதில் ராகேஷ் குமார் 144-149 என தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ராகேஷ்-ஜங் இசெங் (சீனா) மோத உள்ளனர்.
பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி, 139-142 என சீனாவின் ஹுவாங் குலிங்கிடம் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜோதி-ஆயுதியா (இந்தோனேஷியா) மோதுகின்றனர்.