/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய மல்யுத்தம்: பைனலில் தீபக்
/
ஆசிய மல்யுத்தம்: பைனலில் தீபக்
ADDED : மார் 30, 2025 10:52 PM

அம்மான்: ஆசிய மல்யுத்த பைனலுக்கு இந்தியாவின் தீபக், உதித் முன்னேறினர்.
ஜோர்டானில், சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் உதித் குமார், சீனாவின் வான்ஹாவோ ஜூ மோதினர். இதில் உதித் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் (92 கிலோ) இந்தியாவின் தீபக் புனியா, ஜப்பானின் டகாஷி இஷிகுரோ மோதினர். இதில் தீபக் 8-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான 125 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தினேஷ் 5-10 என மங்கோலியாவின் முன்க்துாரிடம் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் (86 கிலோ) இந்தியாவின் முகுல் தஹியா 0-11 என ஈரானின் யாசர் ரஹ்மானி பிரூஸ்ஜேயிடம் வீழ்ந்தார்.