தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ குத்துச்சண்டை: லவ்லினா சாதனை

குத்துச்சண்டை: லவ்லினா சாதனை

குத்துச்சண்டை: லவ்லினா சாதனை


ADDED : செப் 30, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அய்ச்சி: ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் லவ்லினா.

நேற்று நடந்த பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, கஜகஸ்தானின் நடால்யா மோதினர். முதல் சுற்றில் 2-3 என பின்தங்கினார் லவ்லினா. அடுத்த செட்டில் சிறப்பாக செயல்பட 2-0 என முந்தினார். தொடர்ந்து மூன்றாவது செட்டில் சற்று தடுமாறினார். கடைசியில் 3-2 (30-27, 29-28, 29-28, 28-29, 28-29) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறை பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக கடந்த 2023ல் லவ்லின, வெள்ளி வென்றிருந்தார்.

* பெண்களுக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரியா, சீனாவின் செங்யு யாங்கை சந்தித்தார். இதில் பிரியா 1-4 என்ற கணக்கில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

* ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கபில், 1-4 என, கஜகஸ்தானின் டுராபெக்கிடம் தோல்வியடைந்து, வெண்கல பதக்கம் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us