ADDED : செப் 30, 2026 11:19 PM

ககமிகஹரா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி பைனலுக்கு முன்னேறியது.
ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இந்தியாவுக்கு 44 வது நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது.
இதை இந்தியாவின் இஷிகா கோலாக மாற்ற, 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 48 வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் சலிமா, ஒரு பீல்டு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் அவுட்' முறை நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட சீன அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா-சீனா மோத உள்ளன.
44 ஆண்டு
ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி கடைசியாக 1982ல் (டில்லி) தங்கம் வென்றது. தற்போது 44 ஆண்டுக்குப் பின் மீண்டும் தங்கம் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
