தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சத்னம், சல்மான் ஜோடி வெண்கலம்: படகு வலித்தலில்...

சத்னம், சல்மான் ஜோடி வெண்கலம்: படகு வலித்தலில்...

சத்னம், சல்மான் ஜோடி வெண்கலம்: படகு வலித்தலில்...


ADDED : செப் 24, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு, ஆண்களுக்கான படகு வலித்தல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங், சல்மான் கான் களமிறங்கினர். 2000 மீ., போட்டியில் முதல் 1500 மீ., துாரம் வரை இரண்டாவது இடத்தில் இருந்தது இந்திய ஜோடி. பின் ஏமாற்றிய இந்திய ஜோடி, 6 நிமிடம், 13.25 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. சீனாவின் யுடி, ஜிடே (6:09.77), உஸ்பெகிஸ்தானின் சொரின், மமத்குலோவ் (6:10.49) ஜோடிக்கு தங்கம், வெள்ளிப்பதக்கம் கிடைத்தன.

* கடந்த 1990 முதல் ஆசிய விளையாட்டு படகு போட்டியில் இந்தியா, பதக்கம் வென்ற வருகிறது. கடந்த முறை 2 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கம் வென்றது இந்தியா. இம்முறை படகு போட்டி அணிகளில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் பதக்க வேட்டையில் பாதிப்பு ஏற்படுத்த, ஒரு வேண்கலம் மட்டும் கிடைத்தது.

* ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார், 2000 மீ., போட்டியில் பங்கேற்றார். முதல் 1500 மீ., துாரம் வரை இரண்டாவது இடத்தில் வந்தார். கடைசி 500 மீ., துாரத்தில் பின்தங்கிய பால்ராஜ் பன்வார், 6 நிமிடம், 54.80 வினாடி நேரத்தில் வந்து, நான்காவது இடம் பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us