தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் நீரு தண்டா: ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில்

தங்கம் வென்றார் நீரு தண்டா: ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில்

தங்கம் வென்றார் நீரு தண்டா: ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில்


ADDED : செப் 29, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில் பெண்களுக்கான டிராப் பிரிவு போட்டி நடந்தன. இந்தியா சார்பில் நீரு தண்டா (118 புள்ளி), ஆஷிமா (106), மணிஷா கீர் (104) இடம் பெற்ற அணி பங்கேற்றது. மூவரும் இணைந்து 328 புள்ளிகள் பெற்றனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. சீனாவுக்கு (346) தங்கம் கிடைத்தது.

இதில் நீரு மட்டும் முதலிடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார். முதல் 10 ஷாட்டில் பின்தங்கி இருந்த நீரு, அடுத்து தொடர்ந்து முதலிடத்தில் முதலிடத்தில் நீடித்தார். கடைசியில் 28 புள்ளியுடன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். நடப்பு ஆசிய விளையாட்டில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது. தவிர, ஆசிய விளையாட்டு 'டிராப்' பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் ஆனது.

சீனாவின் சன் யுனோங் (26), குவைத்தின் ஹஜர் (21) வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.

இந்திய ராணுவம் வாழ்த்து

நீரு தண்டா 26, இந்திய ராணுவத்தில் சுபேதாராகவும், மணிஷா கீர் ஹவில்தராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்திய ராணுவத்தின் விளையாட்டு மற்றும் சாகசங்கள் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்து செய்தியில்,' நீரு, மணிஷா, ஆஷிமா இணைந்து நேர்த்தியான, மிகச்சிறந்த துல்லியமாக செயல்பட்டு சாதித்துள்ளனர். இவர்களால் இந்திய தேசம், இந்திய ராணுவம் பெருமிதம் கொள்கிறது,' என தெரிவித்துள்ளது.



வாலிபால்: இந்தியா 'திரில்' வெற்றி

நகோயா: ஆண்களுக்கான வாலிபால் லீக் போட்டியில் இந்திய அணி, 3-2 என கத்தாரை வென்றது.

ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் வியட்நாம், ஹாங்காங்கை வென்றது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் வலிமையான கத்தாரை சந்தித்தது.

முதல் இரு செட்டை 26-28, 25-27 என இழந்த இந்தியா, 0-2 என பின்தங்கியது.

அடுத்த செட்டை 25-23 என கைப்பற்றிய இந்தியா, நான்காவது செட்டை 25-20 என வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி, ஐந்தாவது செட்டில் இந்தியா ஒரு கட்டத்தில் 13-14 என இருந்தது. இன்னும் ஒரு புள்ளி எடுத்தால் கத்தார் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய வீரர்கள் போராடினர். 9 முறை மாறி மாறி வெற்றியை பறித்த இந்தியா, கடைசியில் 24-22 என செட்டை வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'த்ரில்' வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

தான்யா ஏமாற்றம்

பெண்களுக்கான 'ஹாம்மர் த்ரோ' போட்டி பைனல் நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற தான்யா (65.35 மீ.,), அனுஷ்கா (65.35 மீ.,) என இருவரும் 4, 5வது இடம் பெற்று, பதக்க வாய்ப்பை இழந்தனர்.

* ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் இந்தியாவின் தேவ் குமார் மீனா (5.50 மீ.,) 7வது, குல்தீப் குமார் (5.35 மீ.,) 10 வது இடம் பெற்றனர்.



தக்சினேஸ்வர் அபாரம்

ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தக்சினேஸ்வர், 7-5, 7-6 என இந்தோனேஷியாவின் குனவானை சாய்த்தார்.

* ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, தக்சினேஸ்வர் ஜோடி, இரண்டாவது சுற்றில் 6-1, 7-5 என கஜகஸ்தானின் டெனிஸ், பெய்பிட் ஜோடியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஈரானை வென்றது இந்தியா

பெண்கள் ஸ்குவாஷ் அணிகளுக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, 3-0 என ஈரானை வீழ்த்தியது. இந்தியா சார்பில் தான்வி கன்னா, அனாஹத் சிங், ஜோஷ்னா என மூவரும் வெற்றி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us