/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் யாஷிதா * ஆசிய யூத் மல்யுத்தத்தில்...
/
தங்கம் வென்றார் யாஷிதா * ஆசிய யூத் மல்யுத்தத்தில்...
தங்கம் வென்றார் யாஷிதா * ஆசிய யூத் மல்யுத்தத்தில்...
தங்கம் வென்றார் யாஷிதா * ஆசிய யூத் மல்யுத்தத்தில்...
ADDED : அக் 29, 2025 10:02 PM

மனாமா: ஆசிய யூத் விளையாட்டு மல்யுத்தத்தில் இந்தியாவின் யாஷிதா தங்கம் கைப்பற்றினார்.
பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 61 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் யாஷிதா 17, பங்கேற்றார். அரையிறுதியில் கிர்கிஸ்தானின் அகிலய்யை, 6-0 என வீழ்த்தினார். பைனலில் யாஷிதா, கஜகஸ்தானின் ஜைதரை சந்தித்தார். முதல் பீரியடில் (3 நிமிடம்), யாஷிதா 0-1 என பின் தங்கினார். இரண்டாவது பீரியடில் யாஷிதா 5-4 என முந்தினார். முடிவில் ஸ்கோர் 5-5 என ஆனது. எனினும், கடைசி புள்ளி எடுத்த அடிப்படையில் யாஷிதா வெற்றி பெற்றார். இந்தியாவுக்கு யூத் ஆசிய மல்யுத்தத்தில் முதல் தங்கம் வென்று தந்தார்.
இதுவரை இந்தியா 4 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம், என மொத்தம் 26 பதக்கம் வென்று, பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (49 தங்கம், 38 வெள்ளி, 18 வெண்கலம்) நீடிக்கிறது.

