தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெள்ளி வென்றார் ஆஷிஷ் * உலக 'யூத்' ஈட்டி எறிதலில்...

வெள்ளி வென்றார் ஆஷிஷ் * உலக 'யூத்' ஈட்டி எறிதலில்...

வெள்ளி வென்றார் ஆஷிஷ் * உலக 'யூத்' ஈட்டி எறிதலில்...


ADDED : ஆக 08, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈகுனே: உலக யூத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் ஆஷிஷ் யாதவ் 19.

அமெரிக்காவில் யூத் (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) உலக தடகள சாம்பியன்ஷிப் 21 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 147 அணிகளில் இருந்து 1800 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 23 வீரர், 13 வீராங்கனைகள் என 36 பேர் களமிறங்கியுள்ளனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஆஷிஷ் யாதவ், தமிழகத்தின் தரணிதரன் பங்கேற்றனர். மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 74.09 மீ., துாரம் எறிந்த ஆஷிஷ், இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். தென் ஆப்ரிக்காவின் ஜான் ஹென்ரிக் (80.50) தங்கம், டொமினிகாவின் அடிசன் ஜேம்ஸ் (73.89) வெண்கலம் வென்றனர். 72.35 மீ., துாரம் மட்டும் எறிந்த தரணிதரன், 6வது இடம் பிடித்தார்.

பைனலில் பூஜா

பெண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் பூஜா, 1.79 மீ., தாண்டினார். 13 பேர் கொண்ட பைனலுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷானவாஸ் கான் 7.73 மீ., ஜித்தின் அர்ஜுனன் 7.57 மீ., துாரம் தாண்டி, பைனலுக்கு தகுதி பெற்றனர். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டம் பைனலில் இந்தியாவின் முகமது ஆஷ்பக் (45.81), 8வது இடம் பிடித்தார்.

10 ஆண்டுக்குப் பின்...

உலக யூத் தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ஆஷிஷ். முன்னதாக 10 ஆண்டுக்கு முன், கடந்த 2016ல் போலந்தில் நடந்த போட்டியில், நீரஜ் சோப்ரா, 86.48 மீ., துாரம் எறிந்து, ஜூனியர் பிரிவில் உலக சாதனை படைத்து, தங்கம் வென்று இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us