/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
5 பதக்கம் வென்ற புவி அகர்வால்
/
5 பதக்கம் வென்ற புவி அகர்வால்
ADDED : அக் 15, 2025 10:55 PM

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் உலக தடகளத்தில் இந்தியாவின் புவி அகர்வால், ஒரு தங்கம், 4 வெள்ளி என 5 பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 20' பிரிவு) போட்டியில் இந்திய வீராங்கனை புவி அகர்வால் பங்கேற்றார். சிறப்பாக செயல்பட்ட இவர், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
அடுத்து, 100, 200, 400 மீ., ஓட்டத்தில் அசத்திய புவி அகர்வால், இரண்டாவது இடம் பிடிக்க வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. தொடர்ந்து குண்டு எறிதலில் பங்கேற்ற புவி அகர்வால், வெள்ளி வசப்படுத்தினார். ஒரு தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 5 பதக்கம் வென்றார் புவி அகர்வால்.