sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : அக் 15, 2025 10:45 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அர்ஜென்டினா கோல் மழை

புளோரிடா: அமெரிக்காவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, போர்டோ ரிகோ அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த அர்ஜென்டினா 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா சார்பில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி, 2 கோல் அடிக்க உதவி ('அசிஸ்ட்') செய்தார்.

காலிறுதியில் பெலிண்டா

நிங்போ: சீனாவில், டபிள்யு.டி.ஏ., நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், உக்ரைனின் யூலியா மோதினர். இதில் பெலிண்டா 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்பெயின் முன்னேற்றம்

ஜடார்: குரோஷியாவில் ஐரோப்பிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 3-2 என ஹங்கேரியை வீழ்த்தியது. 'பி' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த பிரான்ஸ் (4 புள்ளி), ஸ்பெயின் (3) அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறின.

தென் ஆப்ரிக்கா 'டிரா'

இஸ்மாயிலியா: எகிப்தில் நடக்கும் ஆப்ரிக்க கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் எகிப்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. நைஜீரியா அணி 5-1 என ஜாம்பியாவை வீழ்த்தியது. கானா அணி 4-2 என கென்யாவை வென்றது.

எக்ஸ்டிராஸ்

* வரும் 2030ல் ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டை நடத்திட, அதன் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது. இறுதி முடிவு வரும் நவ. 26ல் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள காமன்வெல்த் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.

* ஷில்லாங்கில் (மேகாலயா) நடக்கவுள்ள நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில், இந்திய பெண்கள் அணி, ஈரான் (அக். 21), நேபாளம் (அக். 27) அணிகளை சந்திக்கிறது.

* சீனாவில் நடக்கும் ஜினான் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா ஜோடி 6-7, 6-1, 2-10 என, ஜப்பானின் ஹிரோகோ குவாடா, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

* நாக்பூரில் நடந்த சீனியர் பெண்கள் 'டி-20' தொடருக்கான 5வது சுற்று போட்டியில் தமிழக அணி (108/6) 5 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியிடம் (112/5, 19.3 ஓவர்) தோல்வியடைந்தது.

* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பைனலில், சீன பெண்கள் அணி 3-0 என ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சீன ஆண்கள் அணி 3-0 என, ஹாங்காங்கை வென்றது.






      Dinamalar
      Follow us