/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ராவை முந்திய ஷிவம் * ஈட்டி எறிதலில் அபாரம்
/
நீரஜ் சோப்ராவை முந்திய ஷிவம் * ஈட்டி எறிதலில் அபாரம்
நீரஜ் சோப்ராவை முந்திய ஷிவம் * ஈட்டி எறிதலில் அபாரம்
நீரஜ் சோப்ராவை முந்திய ஷிவம் * ஈட்டி எறிதலில் அபாரம்
ADDED : செப் 08, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலஹல்லி: பெங்களூருவில் 74வது இன்டர் சர்வீசஸ் தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஈட்டி எறிதலில் ஆர்மி ரெட் அணியின், 20 வயது வீரர் ஷிவம் லோஹாகரே, 84.31 மீ., முதலிடம் பிடித்தார். தவிர, 2018ல் இப்போட்டியில் அசத்திய நீரஜ் சோப்ரா (83.80 மீ.,) சாதனையை முந்தினார். நடப்பு சீசனில் தொடர்ந்து 4 வது முறையாக 80 மீ., துாரத்துக்கும் மேல் எறிந்துள்ளார் ஷிவம்.
இத்தொடர் அதிகாரப்பூர்வமற்ற தொடர் என்பதால், ஷிவம் சாதனை சர்வதேச அரங்கில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
நேவி அணியின் ஆனந்த் சிங் (80.28 மீ.,), ஆர்மி ரெட் வீரர் உத்தம் படேல் (78.60 மீ.,) அடுத்த இரு இடம் பெற்றனர்.