ADDED : ஆக 07, 2026 11:08 PM

ஈகுனே: உலக யூத் தடகள சாம்பியன்ஷிப் 400 மீ., ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார் இந்தியாவின் முகமது ஆஷ்பக்.
அமெரிக்காவில் யூத் (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) உலக தடகள சாம்பியன்ஷிப் 21 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 147 அணிகளில் இருந்து 1800 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 23 வீரர், 13 வீராங்கனைகள் என 36 பேர் களமிறங்கியுள்ளனர்.
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. இதன் 5வது பிரிவில் களமிறங்கிய முகமது ஆஷ்பக், 45.81 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 4வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர். தவிர, இது 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 46.05 வினாடியில் ஆஷ்பக் ஓடி இருந்தார்.
அரையிறுதியில் ஆஷ்பக், 46.00 வினாடியில் வந்து, ஒட்டுமொத்தமாக 9வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
பைனலில் பசந்த்
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்று நடந்தது. இந்தியாவின் பசந்த், அதிகபட்சம் 2.14 மீ., தாண்டினார். ஒட்டுமொத்தமாக 11 வது இடம் பிடித்து, 13 பேர் கொண்ட பைனலுக்கு தகுதி பெற்றார்.
பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில், இந்தியாவின் அமனத் கம்போஜ், 53.24 மீ., துாரம் எறிந்தார். இது இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. எனினும், 6வது இடம் மட்டுமே கிடைத்தது.
