/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய ஜோடி சாதனை * பாரா பாட்மின்டனில்...
/
இந்திய ஜோடி சாதனை * பாரா பாட்மின்டனில்...
ADDED : பிப் 12, 2026 11:16 PM

ரிபா: பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப், 'வீல் சேர்' பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என பிரேம் குமார், ஆல்பியா சாதனை படைத்தனர்.
பஹ்ரைனில் பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 'வீல் சேர்' கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் பிரேம் குமார், ஆல்பியா ஜோடி, சக இந்தியாவின் அபு ஹுபைதா, பல்லவி ஜோடியை 21-14, 21-17 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தபட்சம் பதக்கத்தை உறுதி செய்தது. தவிர, பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப், 'வீல் சேர்' பிரிவில் பதக்கத்தை உறுதி செய்த, முதல் இந்திய ஜோடி என சாதனை படைத்தது.
அடுத்து நடந்த அரையிறுதியில் பிரேம் குமார், ஆல்பியா ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற பெல்ஜியத்தின் மேன் கெய், சிலியின் ஜெய்மி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-14, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இத்தொடரில் முதன் முறையாக, பைனலுக்கு முன்னேறியது.

