/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்
/
குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்
ADDED : மே 06, 2024 10:54 PM

அஸ்தானா: ஆசிய யூத் குத்துச்சண்டையில் ஆர்யன், நிஷா உள்ளிட்ட 5 இந்திய நட்சத்திரங்கள் தங்கம் வென்றனர்.
கஜகஸ்தானில் ஆசிய யூத், 22 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான யூத் 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பிரிஜேஷ், தஜிகிஸ்தானின் முமினோவ் முயின்கோட்ஜா மோதினர். அபாரமாக ஆடிய பிரிஜேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்தார்.
ஆண்களுக்கான யூத் 51 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஆர்யன் ஹூடா 5-0 என கிர்கிஸ்தானின் கமிலோவ் ஜாபர்பெக்கை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான யூத் 63.5 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் யஷ்வர்தன் சிங் 4-1 என தஜிகிஸ்தானின் கபுரோவ் ரஸ்லனை வீழ்த்தி தங்கம் வென்றார்.
பெண்களுக்கான யூத் 52 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நிஷா 5-0 என கஜகஸ்தானின் ஒடின்பே பாக்ஜானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை லட்சுமி (50 கிலோ), மங்கோலியாவின் என்க் நோமுந்தரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் சாகர் ஜாகர் (60 கிலோ), பிரியான்ஷு (71), ராகுல் குண்டு (75), ஆர்யன் (92), தமன்னா (54), நிகிதா சந்த் (60), ஷ்ருஷ்தி சாதே (63), ருத்ரிகா (75), குஷி பூனியா (81) வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இத்தொடரில் 22 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 21, யூத் பிரிவில் 22 என மொத்தம் 43 பதக்கம் உறுதியாகின.