UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 08:44 PM

சென்னை: சென்னையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் 3வது சீசன் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா ரேவதி, அமெரிக்காவின் ராபின் மான்ட்கோமெரி மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த மாயா ரேவதி, இரண்டாவது செட்டையும் 3–6 என கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டியில் ஏமாற்றிய மாயா ரேவதி 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். ராபின் மான்ட்கோமெரி காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், உஸ்பெகிஸ்தானின் போலினா குடெர்மெடோவா மோதினர். முதல் செட்டை 5–7 என இழந்த டிஜென், 2வது செட்டை 6–4 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய டிஜென், 3வது செட்டை 6–2 என வென்றார். இரண்டு மணி நேரம், 17 நிமிடம் நடந்த போட்டியில் ஜானிஸ் டிஜென் 5–7, 6–4, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
