UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 08:44 PM

* கத்தார் தலைநகர் தோஹாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் பாவ்தேக் சிங் கில், அனந்த்ஜீத் சிங் நருகா, மைராஜ் அகமது கான் முறையே 24, 25, 46வது இடம் பிடித்தனர். பெண்களுக்கான ‘ஸ்கீட்’ தகுதிச் சுற்றில் இந்தியாவின் கனேமத், பரினாஸ், ரைசா தில்லான் முறையே 13, 23, 32வது இடம் பிடித்தனர்.
* பெங்களூருவில் நடந்த இந்திய கால்பந்து லீக் தொடருக்கான போட்டியில், பெங்களூரு யுனைடெட் அணி 4–3 என்ற கோல் கணக்கில் முகமதன் அணியை வீழ்த்தியது.
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், வரும் நவ. 14–15ல் ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் (20 வயது) நடக்கவுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பின், சர்வதேச ரக்பி போட்டி இங்கு நடக்கவுள்ளது. கடைசியாக 2018ல், பெண்களுக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் (18 வயது) இங்கு நடந்தது.
